Skip to main content

''உட்காருங்க இதுதான் கடைசி...'' - ஆளுநர் உரை குறித்து ஸ்டாலின் கிண்டல்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

 '' Sit down, this is the last budget '' - Stalin's interview on the governor's speech

 

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (02.02.2021) தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கியது.

 

ஆளுநர் உரையானது, ''கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை நிராகரிக்க மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தல். நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்குத் தேவையான நிதியை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தவுள்ளோம். மத்திய அரசின் உதவிக்காக காத்திராமல், உரிய நேரத்தில் தமிழக அரசு விவாயிகளுக்கு நிதி வழங்கியுள்ளது. காவிரி - குண்டாறு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி -தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இலங்கை கடற்படை கப்பல் கொண்டு மோதியதில் நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்த நிகழ்விற்கு இலங்கை அரசை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது'' என்றார்.

 

இந்நிலையில்,7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உரை இடம்பெறவில்லை என சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது. 

 

 '' Sit down, this is the last budget '' - Stalin's interview on the governor's speech

 

வெளிநடப்பு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஆளுநரின் செயலைக் கண்டித்து கூட்டத்தொடர் முழுவதையும் திமுக புறக்கணிக்கிறது. கவர்னர் பேசியதில் எங்களுக்கு உண்மையாகவே மிகவும் பிடித்தது என்னவென்று கேட்டால் '‘உட்காருங்க இதுதான் லாஸ்ட் பட்ஜெட் என்று சொன்னார்கள்.’ ஆமாம் அதுதான் உண்மை. இதுதான் இந்த அரசின் கடைசி பட்ஜெட். அதை உள்ளபடியே வரவேற்கிறோம்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்