கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கும் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக செந்தில்பாலாஜி மற்றும் ஜோதிமணி புகாரளித்தனர்.
மேலும் திமுக, அதிமுக ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்ய நேரம் கேட்டபோது பிரச்சனை எழுந்தது. அப்போது திமுகதான் முதலில் அனுமதி கேட்டிருந்தது. அதனால் எங்களுக்குதான் முதலில் அனுமதி வழங்க வேண்டுமென முறையிட்டனர். மேலும் உள்ளிருப்பு போராட்டமும் செய்தனர்.
இப்படியாக பிரச்சனை தொடங்கியது. இந்தநிலையில்தான் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தான்தோன்றிமலை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஜோதிமணி, செந்தில் பாலாஜி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தி.மு.க. வக்கீல் செந்தில் மற்றும் 100 பேர் எனது வீட்டிற்கு நள்ளிரவில் வந்து கதவைத் தட்டி, பயமுறுத்தியதாக புகார் செய்தார்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி ஜோதிமணி, செந்தில்பாலாஜி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். தற்போது அந்த வழக்கிலிருந்துதான் முன்ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.