திரைப்பட இயக்குனரும், தமிழர் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன் ‘புதிய கல்விக்கொள்கையின் பேராபத்தும் நீட் தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்களும்’ எனும் தலைப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ஜூம் செயலி மூலம் கருத்தரங்கம் நடத்துகிறார்.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர். மத்திய அரசு மும்மொழி கொள்கை அமல்படுத்துவது குறித்து சொல்லிவரும் நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் இருமொழிக் கொள்கைத்தான் தமிழகத்தின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளனர். நீட் தொடர்பாக இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக 3 மாணவர்கள் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ‘புதிய கல்விக்கொள்கையின் பேராபத்தும் நீட் தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்களும்’ எனும் தலைப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ஜூம் செயலி மூலம் கருத்தரங்கம் நடத்துகிறார், திரைப்பட இயக்குனரும் தமிழர் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன்.
இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள ஜூம் ஐ.டி. விவரத்தையும் பகிர்ந்துள்ளார்.
https://us02web.zoom.us/j/88376632751?pwd=WTNJRFJHK2paWjdGRzIyS0RpUHFUZz09