Published on 01/01/2021 | Edited on 01/01/2021
![SECOND PHASE MEDICAL COUNSELLING STUDENTS](http://image.nakkheeran.in/cdn/farfuture/wb4xPi7qOJ2sy5hTU4oCugtflhIjPz4MYH3pe_9KnEM/1609481498/sites/default/files/inline-images/COUNSELLING44.jpg)
தமிழகத்தில் ஜனவரி 4-ஆம் தேதி முதல், இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொடங்கும். 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 4-ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜனவரி 5- ஆம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
7.5% இடஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் உள்ள நிலையில் ஜனவரி 4- ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.