அரசியல் அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மற்றும் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்! என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் இன்று (அக்.21) நடைபெற்றது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக காந்தியடிகள் அரங்கில் 'நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனை குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாக மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் நன்றியுரையாற்றினார்.
அதேபோல் முற்போக்கு பத்திரிக்கையாளர் கெளரிலங்கேஷ் அரங்கத்தில் 'ஒடுக்கப்பட்ட பெண்களும், அரசியல் எழுச்சியும்' என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விமன் இந்தியா மூமெண்ட் மாநில துணைத் தலைவர் பாத்திமா கனி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் உம்முல் தெளலத்தியா வரவேற்புரையாற்றினார். விமன் இந்தியா மூமெண்ட் மாநில தலைவர் நஜ்மா பேகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நசரத் பேகம், அக்தரி பேகம், நசீமா, ஃபரீதா, ஆமினா, ஷம்சாத், ஹாலிதா, மெஹருன்னிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பொருளாளர் வி.எம்.அபுதாகிர், மாநில செயலாளர் சஃபியா நிஜாம், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில துணைத் தலைவர் ரஜியா பானு, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய உறுப்பினர் பாத்திமா முஸஃப்பர், எழுத்தாளர் பேராசிரியை சாந்தி, விமன் இந்தியா தேசிய தலைவர் மெஹருன்னிஷா கான், தேசிய செய்ற்குழு உறுப்பினர் வழ.சாகிரா ராஜா முகமது, விமன் இந்தியா மாநில தலைவர் நஜ்மா பேகம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாக மாநில செயற்குழு உறுப்பின சஃபியா நன்றியுரையாற்றினார்.
இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து மதியம் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் தந்தை பெரியார் அரங்கில் தொடங்கியது.
மாபெரும் மாநாட்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது மாநாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி, தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர், விசிக தலைவர் தொல் திருமாவளவன், புதுச்சேரி மாநில கங்கிரஸ் தலைவரும் புதுவை மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ஆரிய சமாஜ் அமைப்பின் தலைவர் சுவாமி அக்னிவேஷ், அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்முகமது இஸ்மாயில் நாம் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் டி.ஜே.எம். சலாஹுத்தின் ரியாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஃபீக் அகமது, மாநில வர்த்தகர் அணி தலைவர் மொய்தீன், எஸ்.டி.டி.யூ. மாநில தொழிற்சங்க தலைவர், முகமது பாரூக், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வழ.ராஜா முகமது, விம் மாநில தலைவர் நஜ்மா பேகம் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
மாநாட்டில் உரை நிகழ்த்திய தலைவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அரசியல் ரீதியில் ஒருங்கிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தனர். இறுதியாக மாநில செயலாளர் அமீர் ஹம்சா நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாநாட்டு சிறப்பு மலரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜித் வெளியிட்டார்.
மாநாட்டின் திருச்சி பிரகடனத்தை மாநில பொருளாளர் வி.எம்.அபுதாகிர் வாசித்தார்.
தொடர்ந்து பின்வரும் 21 மாநாட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
1. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டுவர வேண்டும்.
2. மின்னணு வாக்குப்பதிவு தேர்தல் முறையை மாற்றி வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்.
3. தமிழகத்தில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.
4. மத்திய பாஜக அரசை வீழ்த்த அனைத்து ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
5. ஏழு தமிழர்கள் உட்பட முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
6. விவசாயத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.
7. அழிவுத் திட்டங்களிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும்.
8. யு.ஏ.பி.ஏ. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
9. என்.ஐ.ஏ.வை கலைக்க வேண்டும்.
10. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே அமுல்படுத்த வேண்டும்.
11. கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்திட வேண்டும்.
12. கல்வி மற்றும் தொழில் துவங்க வட்டியில்லா வங்கிக்கடன் வழங்கிட வேண்டும்.
13. ஜனநாயக வழியில் போராடும் போராளிகள், சிந்தனையாளர்கள் மீதான அடக்குமுறை கைவிடப்பட வேண்டும்.
14. சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிடுக:
15. 40 லட்சம் அஸ்ஸாமிகளின் குடியுரிமையை பறிக்கும் தேசிய குடியுரிமை பதிவேட்டை ரத்து செய்ய வேண்டும்.
16. சிறுபான்மை முஸ்லிம், கிருத்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் கட்டும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும்.
17. வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும்.
18. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
19. வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.
20.உருது மொழி உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை அழிவிலிருந்து பாதுக்காத்திட வேண்டும்.
21. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான முத்தலாக் தடை அவசரச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.