டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை 10 முதல் 80 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது. குவாட்டருக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாயும், மீடியம் மற்றும் உயர் ரக மது பானங்களுக்கு 20 ரூபாயும் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு 20 ரூபாயும், மீடியம் மற்றும் உயர் ரக மது பானங்களுக்கு 40 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஃபுல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு 40 ரூபாயும், மீடியம் மற்றும் உயர் ரக மது பானங்களுக்கு 80 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பீர் வகைகளுக்கு பத்து ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் தினமும் மதுவகைகளால் 10.35 கோடி ரூபாயும், பீர் வகைகளால் 1.76 கோடி ரூபாயும் என கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4,396 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.