Skip to main content

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு!

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

 School Education Department suddenly orders private schools!

 

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற உறுதியைத் தனியார் பள்ளிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிறுத்தி வைக்க கூடாது என தமிழக அரசு ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு அளித்திருந்த உத்தரவு சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக அறிந்துகொள்ளக் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று உறுதியளிக்கும் வகையில் சான்றளிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. கரோனா பரவல் அதிகம் இருந்த காலங்களில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் கெடுபுடி காட்டியதிலிருந்து கல்விக் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்திருந்த நிலையில், தற்பொழுது தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்