Skip to main content

சேலம் காவல் ஆய்வாளர் திடீர் மரணம்! காவல்துறையினர் இரங்கல்!!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022

 

salem police inspector incident condolences other police officers

 

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 58). கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 

 

ஜன. 5- ஆம் தேதி, குடும்பத்தினரைப் பார்த்துவிட்டுச் செல்வதற்காக சேலம் வந்த அவருக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சேலம் 5 சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜசேகரன் அனுமதிக்கப்பட்டார். 

 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 25) காலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள், சக காவல்துறையினர், நண்பர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய சடலம் வீட்டு முன்பு வைக்கப்பட்டது. பணிக்காலத்தில் இறந்ததால் அரசு மரியாதையுடன் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெறும் பழைய நடைமுறை அமலில் இருந்திருந்தால் அவர் இந்தாண்டு ஓய்வு பெற்றிருப்பார். உயிரிழந்த காவல் ஆய்வாளர் ராஜசேகரன், ஏற்கனவே சேலத்தில் செவ்வாய்பேட்டை, அழகாபுரம் மற்றும் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுகளில் பணியாற்றி உள்ளார். அவருக்கு கீதா என்ற மனைவியும், ஸ்வேதா என்ற மகளும், அருண் என்ற மகனும் உள்ளனர். 

 

ராஜசேகரன் மறைவுக்கு, சேலத்தில் அவருடன் பணியாற்றிய சக காவல்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்