Skip to main content

'விசைப் படகுகள் அத்துமீறல்'-நாட்டுப்படகு மீனவர்கள் தர்ணா

Published on 06/02/2025 | Edited on 06/02/2025

 

Dharna of country boat fishermen

புதுக்கோட்டையில் விசைப்படகு மீனவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்து நாட்டுப் படகு மீனவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை அடுத்துள்ள புதுகுடியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விசைப்படகு வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்காமல் விதிகளை மீறி, கடல் ஓரத்திலேயே வலைகளை போட்டு மீன் பிடிப்பதோடு, தங்களுடைய வலைகளை சேதப்படுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். தொடர்ச்சியாக போலீசாரும் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்