Skip to main content

'கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை; ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கும்பல்'- வேலூர் அருகே கொடூரம்

Published on 06/02/2025 | Edited on 06/02/2025

 

Gang harassed pregnant woman and threw her off a moving train'- horror near Vellore

திருப்பூரில் இருந்து ஆந்திரா செல்லும் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு வேலூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் கோயம்புத்தூரில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இன்று மதியம் இன்டர்சிட்டி ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்துள்ளார். பெண்கள் பெட்டியில் பயணித்து கொண்டிருந்த அவருக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். திடீரென கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் அக்கும்பல் கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

கழிவறைக்கு சென்ற பொழுது அங்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் கூச்சலிட்டதால் அக்கும்பல் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் காவல்துறையினர், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அடுக்கம்பாளையம் அரசு மருத்துவக் கல்லூரியில் அப்பெண்ணை அனுமதித்துள்ளனர். கை மற்றும் கால் உள்ளிட்ட இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண்ணின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகள் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பல் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடூர  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்