![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/hf0czmfaF1n3qeQuh81npLDWagkcH_dBNBzR7KuS1tM/1738864633/sites/default/files/inline-images/a2467.jpg)
'வேண்டுமென்றே மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பிரச்சனை செய்து திசை திருப்பக் கூடிய வேலையை திமுக அரசு செய்கிறது'பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் 'சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காமல் ஒன்றிய அரசும் மாநில அரசும் நேர்கோட்டில் பயணிக்கின்றன' என விஜய் அறிக்கை வெளியிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன், ''தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் ரொம்ப சரியான ஒரு விஷயத்தை சொல்கிறார். நேர்கோட்டில் பயணிக்கிறது என்கிறார். மாநில அரசு ஒரு நாளும் நேர்கோட்டில் வரவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் இத்தனை பிரச்சனை. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை மாநில அரசு நடத்தலாம். பீகாரில் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசே நடத்த முடியும். ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என பிரச்சனை செய்து திசை திருப்பக் கூடிய வேலையை திமுக அரசு செய்கிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடுக்கு சிறப்பான திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். தமிழகத்தில் ராணுவத் தொழில் காரிடார் கொடுத்தோம். இந்தியாவிலேயே டிபன்ஸ் இன்னோவேஷன் கிளப் என்பதை கோயம்புத்தூரில் தான் ஆரம்பித்தோம். கோவை இப்பொழுது ராணுவ உற்பத்தி மையமாக மாறிக் கொண்டு வருகிறது அதையும் நீங்கள் பார்க்க வேண்டும்'' என்றார்.