Skip to main content

சேலத்தில் சிறைக் கைதி திடீர் மரணம்; மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

SALEM CENTRAL PRISON MAGISTRATE INVESTIGATION


சேலம் சங்கர் நகரைச் சேர்ந்தவர் சீரங்கன். இவருடைய மகன் செல்வம் (42). கடந்த 2011- ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் அழகாபுரம் காவல்துறையினர் செல்வத்தைக் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த 2017, மே 14- ஆம் தேதி முதல் அவர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
 


இந்நிலையில் செல்வம், திடீரென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக வெள்ளிக்கிழமை (மே 22- ஆம் தேதி) காலையில் கூறினார். சிறைக்காவலர்கள் அவரை உடனடியாகச் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு கைதிகளுக்கான ஸ்ட்ராங் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆயுள் தண்டனை கைதி திடீரென்று இறந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்