Skip to main content

முகநூல் நேரலை வீடியோ விவாதம் - பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் பயங்கர தாக்குதல்!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

 

பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக  இன்று மாலை  மணிக்கு மேல் சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்றார் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ்.  

 

m

 

முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் பாஜக அலுவலகத்திற்கு விளக்கம் கேட்க செல்கிறேன் என்று நேரலை வீடியோ பதிவிட்டவாறே சென்றார் மனுஷ்.   

 

m

 

வீடியோ எடுத்தவாறே பாஜக அலுவலகத்தில் இருந்த  நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   

 

’எனக்கு ஏன் மிரட்டல் விடுக்கிறார்கள்’என்று பியூஸ் கேள்வி எழுப்ப, ‘நீ மரியாதை இல்லாமல் பேசினால் அப்படித்தான் செய்வார்கள்’ என்று பாஜக நிர்வாகி ஒருவர் பதில் சொன்னதும், இருவருக்கும் வாக்குவாதம் துவங்கியது.  

 

m


நித்யானந்தா விவகாரம், சபரிமலை விவகாரம், மரம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   

 

ராஜஸ்தானில் இருந்து வந்த வந்தேறி உனக்கு எப்படி இத்தனை சொத்துக்கள் வந்தது என்று பாஜக நிர்வாகி கேள்வி எழுப்ப, ‘நான் விவசாயி’ என்று பியூஸ் சொன்னதும்,  விவசாயிக்கு எப்படி இத்தனை சொத்து வந்தது என்று பாஜக நிர்வாகி கேள்வி எழுப்பினார்.

 

p

பியூஸ் மனுஷ், பாஜக அலுவலகம் சென்றபோது அங்கே ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.  விவாதம் நீண்டுகொண்டே செல்லவும்,  ஒன்று, இரண்டு, பத்து, இருபது என்று பாஜகவினர் திரண்டனர்.  

 

அமித்ஷா, எச்.ராஜா, நிர்மலாசீதாராமன் குறித்தும் அதிரடி வாக்குவாதத்தில்  ஈடுபட்ட பியூஸ் மனுஷிடம்,  ‘உன்னை தூண்டிவிடுகிறார்கள்...நீ தீவிரவாதி...தீவிரவாதத்தை வளர்க்கிறாய்..’என்று ஆவேசத்துடன் பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் பயங்கர தாக்குதல் நடத்தினர்.  அவருக்கு செருப்பு மாலையும் அணிவித்தனர் கோஷம் எழுப்பினர்.   


 போலீசார் தடுத்தும், பியூஸ் மனுஷ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கடும் தாக்குதலில் பியூஸ் மனுஷ் மயங்கி விழுந்தார்.  நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார், மனுஷை  மீட்டு அழைத்துச்சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்