Published on 14/06/2019 | Edited on 14/06/2019
2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் 24 இந்திய மொழிகளில் எழுத்தாளர்கள் படைக்கும் கவிதை தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவைகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் அறிவிக்கப்படும் நிலையில்

இந்த ஆண்டு விருது பட்டியலில் 'வால்' என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடெமி யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குழந்தைகள் இலக்கிய பங்களிப்பாக எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு 'பால புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.