Published on 03/03/2019 | Edited on 03/03/2019

சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் கத்தியைக் காட்டி கடைகளில் மிரட்டி மாமூல் வசூல் செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பா என்கின்ற மணிகண்டன். இவன் செம்மஞ்சேரியில் உள்ள கடைகளில் கத்தியை காட்டி மாமூல் வசூல் செய்து வந்துள்ளான். அப்படி ஒரு கடையில் கத்தியை காட்டி கடை உரிமையாளரிடம் இருந்து மிரட்டி பணத்தை வசூல் செய்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இந்த கட்சிகளை ஆதாரதமாக வைத்து கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.