சென்னை போக்குவரத்து போலீஸார், தனியார் வாகனங்களில் ஊடகம், நீதித்துறை, காவல்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டம் 138 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் விதிமுறை மீறலில் ஈடுப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இதற்கு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வாகனங்களை நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஊடகத்தில் பணியாற்றுவர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். ஆனால் வேறு ஒரு பெயரில் உள்ள வாகனத்தில் ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை போக்குவத்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், முதல் தடவை விதி மீறலில் ஈடுபட்டால் 500 ரூபாய் அபராதமும், இரண்டாவது தடவை விதி மீறலில் ஈடுபட்டால் 1500 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.