Skip to main content

ஜிம்-மை உடனடியாக திறக்க அரசுக்கு கோரிக்கை - தமிழ்நாடு ஜிம் ஓனர்ஸ் அசோசியேசன் 

Published on 28/04/2021 | Edited on 28/04/2021
Request to the Government to open gym immediately

 

கடந்த வருடம் கரோனா காலத்தில் உடற்பயிற்சி நிலையங்கள் அதிக நாட்கள் மூடப்பட்டு இருந்தது. அதில் 600க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் தமிழகத்தில் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. தற்போதும் பல இடங்களில் அவ்வாறான சூழல் நிலவுகிறது. இது இப்படியே தொடருமானால் இந்தத்துறையே முழுமையாக இல்லாமல் போய்விடும். நாங்கள் ஊரடங்கோ அல்லது அரசு மற்றும் சுகாதாரத்துறை கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். 

 

ஆனால் அவை முழுமையான ஊரடங்காக இருக்க வேண்டும், மற்ற துறைகள் எல்லாம் செழிப்பாக செயல்பட உடல் ஆரோக்கியத்திற்காக மட்டும் இயங்கும் எங்களை வீட்டிற்குள் அடக்குவது ஏன்? மருத்துவத்திற்கு நிகரானது உடற்பயிற்சி கூடத்துறை என அவை தெரிந்தும் நீங்கள் கேளிக்கை விடுதி மற்றும் சுற்றுலா தளமான பொழுது போக்கு அம்சங்களுடன் எங்களை இணைத்து இழுத்து மூடுவது எதற்காக? கடந்த வருடம் மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்த SOP மற்றும் பல வழிகாட்டுதல்களை பின்பற்றி தற்போது வரை ஜிம்’களை நடத்தி வருகிறோம்.

 

Request to the Government to open gym immediately

 

 

நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்து உள்ளோமே தவிர, கரோனா தொற்று பரவும் இடம் இவை இல்லை. பொது வெளியில் இருந்து வருபவரை முழுமையாக பரிசோதனை செய்த பின்பே ஜிம்’ மிற்குள் அனுமதிக்கிறோம். உடனடியாக தமிழக அரசு எங்களது தமிழ்நாடு ஜிம் ஓனர்ஸ் அசோசியேசனின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் நாங்கள் முழுமையாக கேட்கவில்லை அரசு வழிகாட்டுதலுடன் 50 சதவீத உறுப்பினர்களுடன் உடற்பயிற்சி கூடம் செயல்பட அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

 

அதேபோல் தற்போது தமிழகம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கால் ஹோட்டல், டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதில் சலூன், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் என அனைத்தும் மூட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு முடி திருத்துவோர் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் சென்று சலூன் கடைகளை திறக்க அனுமதி தரக்கோரி மனு அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு உடற்பயிற்சி கூடங்கள் நடத்துவோர் சங்கத்தினர் சார்பிலும் ஜிம்-மை திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்