Skip to main content

செயலற்ற நகராட்சி.. குப்பை நகரமாக ராமேஸ்வரம்.!

Published on 20/01/2019 | Edited on 20/01/2019

    

r

 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் நகரை சுத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை அமல்படுத்தினாலும் இன்னும் ராமேஸ்வரம் குப்பைமயமாக சுகாதாரக்கேடுடன் காட்சியளிக்கின்றது.

 

r

 

  வடக்கே காசி, தெற்கே ராமேஸ்வரம் என காசிக்கு நிகராக இந்துக்களின் புனிதத்தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் உள்ள ராமேஸ்வரத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருவதுண்டு. " நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், நகராட்சி வாசல் அருகிலேயே தடைச்செய்யப்பட்ட பாலீதீன் பைகள் கொட்டப்பட்டும், நகரின் முக்கிய பகுதிகளான கோவில் ரதவீதிகள், மேற்கு கோபுர வாசல்,  ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனை போன்ற பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கப்படாமல் சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடப்பதும்,   அரசு மருத்துவமனையை சுற்றுச்சுவர் அருகே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கிக் கிடப்பதும் நகராட்சியின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. அது போக நகரத்தில் திருமணமண்டபங்கள், விடுதிகள் இவற்றினால் வெளியேற்றப்படும் கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி கிடப்பதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சரி செய்யாவிடில் வெகு விரைவில் போராட்டம் நடைபெறும்" என்கின்றனர் பொதுமக்கள்.

 

சார்ந்த செய்திகள்