Skip to main content

மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து ஓ.பி.எஸ். மகன்தான் மணல் சப்ளை செய்கிறார்! ஈ‌.வி.கே.எஸ்.இளங்கோவன் பகீர்!!

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

 

டெல்டா பகுதி விவசாயிகளை வஞ்சிக்கும் மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து துணை முதல்வர் ஓ.பி.எஸ்.மகன் தான் மண், மணல் சப்ளை செய்து ,கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார் என்று தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார்.

 

ev


 தேனியில் தங்கியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது....
  தேனி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மோடிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து , எந்தவித பர்மிட் இல்லாமல் ஒரு நபருக்கு ரூ 1000 கொடுத்து அழைத்து வந்துள்ளார்கள். அப்படி இருந்தும் கூட்டம் வரவில்லை. இதன் பேரில் போக்குவரத்து அதிகாரிகளும், தேர்தல் கமிசனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 மோடி பேசும் போது ,என்னை வெளியூரில் இருந்து வந்து போட்டியிடுவதாக கூறியுள்ளார்.  எம்.ஜி.ஆரும்,  ஜெயலலிதாவும் எங்கிருந்து வந்து ஆண்டிபட்டியில் போட்டியிட்டார்கள். மேலும் வேட்பாளர்கள் மோடியின் காலில் விழும் அவல நிலை தொடர்கிறது .   இந்திய குடிமகன் இந்தியாவில் எங்கும் போட்டியிடலாம்.   குஜராத்திலிருந்து தற்போது மோடி உ.பி.யில் போட்டியிடவில்லையா?. இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் பேசுவது ஜனநாயகத்திற்கு கேடு.   மோடி சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்பது மோடி யின் தேனி பேச்சு சான்றாக உள்ளது.

 

e


 எதிர்கட்சியினரை பார்த்து பிரதமர் வரிசையில் நிற்கிறார்கள் என்று கூறுகிறார். இவர் பிரதமர் வரிசையில் இல்லையா? மேகதா துவில் அணை கட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறவில்லை. அவர் கூறுவதாக நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்.  எதிர்கட்சி தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையை வைத்து ரைடு நடத்துகிறார்கள். கோடி, கோடியாய் குவித்து ஆளும் கட்சியினரிடம் ஏன் சோதனை செய்யவில்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை தான்.

 

மோடி கிட்லரைப் போல செயல்படுகிறார்.  ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஒரு தடவை பணம் வாங்கி விட்டு 5 வருடம் மக்கள் ஏமாற வேண்டாம். எனக்கு தேர்தலில் போட்டியாக, சுயேட்சைகள் உள்பட 29 பேரையும் கருதுகிறேன். சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி.


  முதல்வராக, துணை முதல்வராக, அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். தனது சொந்த மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. எம்.பி.யாக இருந்த பார்த்தீபன் தனது சொந்த கிராமத்தில் பொது கழிப்பிடம் கூட கட்டவில்லை என்று பொதுமக்கள் என்னிடம் சொல்கிறார்கள். தனது எம்.பி. தொகுதி நிதியை கூட செலவிடவில்லை. வைகை அணையை சுற்றியுள்ள கிராமங்களில் கூட தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.
 

 பாகிஸ்தானில் குண்டு போட்டு 350 பேரை கொன்றதாக கூறும் மோடி ,  ஒரு சடலத்தை கூட காட்டவில்லை. காஷ்மீர் பிரச்சனையில் இம்ரான்கானின் பேச்சு, மோடி இடையிலான கூட்டுசதியை காட்டுகிறது. கங்கையைப் போல் வைகையை சுத்தம் செய்வோம் என்கிறார் மோடி. கங்கை வாரனாசியில் பிணங்கள் மிதந்து வருகிறது.   குடும்ப அரசியல் கூடாது என்று மோடி கூறியது. ஓ.பி.எஸ். மகனை நிறுத்தியதைத் தான் குறிக்கிறது. மோடி துக்ளக் ஆட்சியை நடத்துகிறார்.


   ஓ.பி.எஸ்.சிடமிருந்து 500, 1000 இல்லை ரூ 5 ஆயிரம் வாங்குங்கள். பணத்தை குடோன், குடோனாக பதுக்கி வைத்துள்ளார்கள். இது குறித்து வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன். 

ஜெயலலிதா, எடப்பாடி போன்றோர் வழக்கு போடுகிறார்கள் .ஆனால் வாதாடாமல் வாய்தா வாங்குகிறார்கள்.  கருணாநிதி மறைவுக்கு பின் தலைவராக ஸ்டாலின் சரியாக செயல்பட்டு வருகிறார். ஆனால் ஜெயலலிதாவிற்குப் பின் அமைச்சர்கள் கோமாளிகளாக பேசி, நடந்து கொள்கிறார்கள். ஆகவே அதிமுகவில் தான் வெற்றிடம் உள்ளது. ஸ்டாலின் ஏழைகளின் 5 பவுண் அடகு நகையை மீட்டு தருவேன் என்ற வாக்குறுதி நிறைவேறும். மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று ராகுல் கூறியுள்ளார்.  சேது சமுத்திரம் திட்டம் தொடரும் என்று டி.ஆர்.பாலு தெளிவாக கூறியுள்ளார்.
 

மற்ற பகுதிகளில் பண மழை பொழிகிறது. ஆனால் தேனியில் அதிமுக வேட்பாளர் மூலம் பண சுனாமியே அடிக்கிறது. எந்த சுனாமியையும் வெல்லும் திறன் எங்களிடம் உள்ளது என்று கூறினார்.
 

பேட்டியின் போது காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், மாநில இளைஞர் காங்கிரஸ் அசன், திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி மூக்கையா உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்