Published on 12/07/2019 | Edited on 12/07/2019
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி - நாகம்மாள் மகன் நாகராஜ் ( 34 ). இவரை மர்ம நபர்கள் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழக்கரை காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
