Published on 19/02/2019 | Edited on 19/02/2019
மக்களவை தேர்தல் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டது பாமக. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், ’’திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதுதான் 2011 முதல் பாமகவின் நிலைப்பாடு. இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. 2018 டிசம்பர் 29,30 ல் கோவையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானத்தின்படி ஒத்த கருத்துடையை கட்சிகளூடன் கூட்டணி அமைக்க தீர்மானம் நிறைவேற்றது.
பாமக தலைமையில் கூட்டணி அமைக்க முடியாத இரு திராவிட கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவதுதான் வாய்ப்பாக இருந்தது. கொள்கைகளில் பாமக தேக்குமரமாக இருந்து வருகிறது. கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை’’என்று தெரிவித்துள்ளார்.