Published on 17/03/2023 | Edited on 17/03/2023
![Rainwater surrounds Chennai North Zone Police Headquarters](http://image.nakkheeran.in/cdn/farfuture/ToJ5LTDHv5NBJsyiu0OS2iXv1XOAM1NW52MkYdx8H-E/1679047713/sites/default/files/inline-images/th-2-2_25.jpg)
சென்னையில் கடந்த ஒரு மாத காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் முதல் வெயில் காலம் துவங்குவதற்கு முன்பே அனல் காற்று வீசி வந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று வெப்ப சலனம் காரணமாக சென்னையில் ஒரு சில பகுதிகளில் ஒரு மணிநேரம் மழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை வடக்கு மண்டல காவல்துறை தலைமையகத்தில் மழையால் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் வந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. மேலும் போலீசாரும் மழையால் தண்ணீர் தேங்கியதால் அவதிப்பட்டு வந்தனர்.