Published on 16/08/2021 | Edited on 16/08/2021

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் பெருவாரியான இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16,17,18 ஆகிய தினங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.