தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இன்று சென்னையில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானாவை ஆதரித்து இன்று காலை 11 மணிக்கு அவர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதேபோல் இன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.