Skip to main content

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயலலிதா கைரேகை போலி...! மருத்துவர் மீது விசாரணை நடத்திட வேண்டும்... - கே.பாலகிருஷ்ணன்

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், வேட்பாளர் ஒப்புகை படிவத்தில் இருந்தது  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை இல்லை என குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர் பலாஜி, ஜெயலலிதா சுயநினைவோடுதான் கைரேகையிட்டார் என கூறியிருந்தார்.

 

k balakrishnan

 

ஆனால் தற்போது உயர்நீதிமன்றம், ஜெயலலிதா கைரேகை போலியானது என தீர்பளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலஜி விசாரணை ஆணையத்தில் உண்மயை கூறவில்லை என்பது தெளிவாகியுள்ளது, இந்த விஷயத்தில் உரிய விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்