Skip to main content

''தனிப்பெரும் தலைவர் அவர்...''-புகேழந்தி வாழ்த்து

Published on 02/12/2024 | Edited on 02/12/2024
 "He is a great leader..." - Pugazhethi greetings

அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் புகழேந்தி  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அய்யாவின் கொள்கைகளை நிலை நிறுத்தியும்; சுயமரியாதை பாதையில் புதிய வரவுகளை வரவேற்றும்; முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பிற கட்சிகளின் தலைவர்கள் இவரின் ஆலோசனைகளை தலை வணங்கி ஏற்றும்; ஐயாவை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் எவரும் இவரை அறியாதவர் இல்லை என்கின்ற புகழ் கொண்டவர்.

நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் தனிப்பெரும் தலைவராகவும் போற்றி புகழ்பாடி வணங்கும் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், அன்புடன் அழைக்கும் ஆசிரியராகவும் நாங்கள் அனுதினமும் புகழ் பாடும் தந்தை பெரியார் அவர்களின் வாழ்த்துகளுக்கு உரியவராகவும் எங்களது நெஞ்சங்களில் நீங்கா இடத்தை பெற்ற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் காணும் இன் நாளில் நன்னாளில் சுறுசுறுப்பிற்கு குறைவில்லாமல் ஓய்வுக்கு ஓய்வு தந்து என்றும் இளமை தோற்றத்துடன் வளமான ஆரோக்கியத்துடன் நீடு வாழ்க வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்