திருமணமான 20 நாளில் தனது நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கிராமம் செட்டிமூலை. அங்குள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்த வீராசாமி - நீலாபதி தம்பதியினரின் மகள் லட்சுமி. இவரை கடந்த மே மாதம் 25ஆம் தேதி தலைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன் ராஜேந்திரனுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். மாமனார் வீட்டு விருந்துகள் முடிந்து தலைக்காடு கிராமத்திற்கு வந்தனர் இருவரும்.
திடீரென ஒரு நாள் தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வேண்டும் என்று லட்சுமியின் நகைகளை வலுக்கட்டாயமாக பிடிக்கி சென்ற ராஜேந்திரன், அதன் பின்னர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நீ அழகா இல்ல என்று சொல்லி அடிக்கடி லட்சுமியிடம் தகராறிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லட்சுமியை சினிமாவிற்கு போகலாம் கூறி அழைத்து சென்றிருக்கிறார். போகிறவழியில் இவர்கள்தான் எனது நண்பர்கள் என்று இரண்டு பேரை காட்டியுள்ளார். இவர்களோடு இங்கேயே இரு... உடனே வந்துவிடுகிறேன் என்று நண்பரின் வீட்டில் மனைவியை விட்டுவிட்டு சென்றிருக்கிறார் ராஜேந்திரன்.
இந்தநிலையில் இரவு 2 மணியளவில் அலங்கோலமாக அழுகையோடு வீட்டுக்கு வந்த லட்சுமி, கணவன் ராஜேந்திரனின் சட்டையை பிடித்துக்கொண்டு, என்னோட வாழ்க்கைய சீறழிச்சிட்டியே உன்னோட மனைவிய உன்னோட அந்த நாய்களுக்கு விருந்தாக்க நினைச்சியே உன்னோட இனி நான் இருக்க மாட்டேன் என்று தாய் வீட்டிற்கு கிளம்பிய லட்சுமியை தடுத்து நிறுத்திய ராஜேந்திரன், நீ உங்க அப்பன் வீட்டுக்கு போ... ஆனா இங்க நடந்தத வெளியே சொன்னா நீ உசுறோட இருக்க மாட்ட... என கூறியிருக்கிறான் ராஜேந்திரன்.
கோபத்தின் உச்சத்திற்கே சென்ற லட்சுமி என்னோட உசுறே போனாலும் உண்ண சும்மாவிடமாட்டேன் என்று பிடிவாதமாக கிளம்ப, வாசலில் கிடந்த உலக்கை எடுத்து முகத்திலேயே அடித்திருக்கிறான். வலி தாங்க முடியாத லட்சுமி ராஜேந்திரன் அந்த இடத்தில் இருந்து செல்லும் வரை அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் செல்போன் மூலம் பெற்றோருக்கு சம்பவத்தை சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த லட்சுமியின் பெற்றோர் உடனடியாக வந்து லட்சுமியை மீட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசிலும் புகார் கொடுத்தனர். ராஜேந்திரன் மீது தலைஞாயிறு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது நண்பர்களில் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை மறைவான மற்றொருவரை தேடி வருகிறார்கள்.