ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலட்சுமி. இவரது மகன் சூர்யாவுக்கு பிறந்து சில ஆண்டுகளூக்கு பின்னர் நடக்க முடியாமல் போனது. அதன்பின்னர், பேசவும் முடியவில்லை. சீராக இயங்கிய இதயம் எப்போதும் படபட என்று அடிக்க தொடங்கியது. செல்போன் மணி ஒலித்தாலே அதை தாங்க முடியாமல் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டான் சூர்யா.
குருலட்சுமியின் கணவன் பிரிந்து சென்று விவாகரத்து கேட்பதால், அக்காவு குருலட்சுமிக்கு வெங்கடேசன் தான் உதவியாக இருக்கிறார். சகோதரிக்காக தனது திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார். வேங்கடேசனும் குருலட்சுமியும் சூர்யாவை தோளில் சுமந்து பல மருத்துவமனைகளுக்கும் அலைந்து சென்றும் பிரயோசனமில்லை.
இந்த நிலையில், சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை பாருங்கள். அவர் மருத்துவ உதவி செய்வார் என்று இவர்களிடம் கூறியிருக்கிறார்கள்.
இதையைடுத்து சூர்யாவை எப்படியும் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில், மூவரும் சென்னை வந்தனர். ஆனால் அவர்களால் லாரன்சின் முகவரியை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. ஊருக்கு திரும்பவும் முடியாமல், சூர்யாவுக்கு சிகிச்சை அளிக்கவும் முடியாமல் கடந்த சில தினங்களாக பிளாட்பாரத்திலேயே தங்கி இருக்கிறார்கள்.
சூர்யாவை காப்பாற்றும் வரை, லாரன்ஸ் முகவரியை கண்டுபிடிக்கும் வரை, பசிக்கு என்ன செய்வது? சிறு, சிறு வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கிறார் வெங்கடேசன். ரயில்வே பிளாட்பாரத்தில் இவர்கள் இருக்கும் நிலையை பார்த்து பயணிகள் தாங்களாகவே முன்வந்து 5, 10 கொடுத்து செல்கிறார்கள். இப்படி பிச்சை எடுக்கும் நிலைக்கு வ ந்துவிட்டாலும் எப்படியும் சூர்யாவுக்கு நல்வாழ்வு வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.