Skip to main content

துப்பாக்கி குண்டை அகற்றிய அரசு மருத்துவர்கள்

Published on 14/05/2019 | Edited on 14/05/2019


 
    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுக்கா, திருக்கட்டளையை சேர்ந்த ராஜேந்திரன் (40)  தனது நண்பருடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஒற்றைகுழல் துப்பாக்கியால் 11 ம் தேதி மாலை 4  மணிக்கு சுடப்பட்டார். இதில், ராசேந்திரனின் இடது காலில்  குண்டு பாய்ந்து  தசையை ஊடுருவி கால் எலும்பிற்கு பக்கத்தில் இருந்தது.

 

m


 எக்ஸ்ரே மூலம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கி குண்டை அகற்ற முயற்சித்தனர். அது ஆழமாக பதிந்துள்ள நிலையில் அகற்றுவது சிக்கலாக இருந்ததால் எம்.ஆர்.ஐ. அதிநவீன கருவி மூலம் துப்பாக்கி குண்டு இருந்த இடத்தை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த இரு குண்டுகளை அகற்றினர்.  


    இதுபற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் அழ.மீனாட்சிசுந்தரம் கூறும் போது..  11 - ம் தேதி மாலை சுடப்பட்ட ராஜேந்திரன் 12 ம் தேதி நள்ளிரவு 12  மணிக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அனுமதிக்கப்பட்ட ஐந்தரை  மணிநேரத்தில் அவருக்கு தேவையான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கிக் குண்டுகள் அகற்றப்பட்டன.


    துப்பாக்கிக் குண்டுகள் உடல் திசுக்களின் வழியே நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் அதை அகற்றுவது சவாலானது. எம்.ஆர்.ஐ. என்னும் அதிநவீன கருவி மூலம் உடனுக்குடன் எக்ஸ்ரே எடுப்பது போல் கண்காணிக்க முடியும். துப்பாக்கி குண்டு போன்ற உலோக பொருட்கள் நகர்வதையும் இக்கருவி மூலம் கண்டறியலாம். எலும்புகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் இக்கருவிமூலம் துப்பாக்கிக் குண்டு இயக்கத்தை கண்டறிந்த எலும்பு மருத்துவர்கள் ராஜ்மோகன், சங்கர் மற்றும் மயக்க மருத்துவர் ரவிக்குமார் ஆகியோர் அகற்றியது பாராட்டத்தக்கது என்றார். 


    துப்பாக்கியால் சுட்ட நபரை வல்லத்திராகோட்டை போலிசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
            

சார்ந்த செய்திகள்