கரோனா கிருமி தொற்றில் இருந்து தப்பிக்க ஒரே வழி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுதான். அதனால் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்த நிலையில் தான் வெளிநாடுகள், வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையினர், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
![pudukkottai government officers visit homes has give books](http://image.nakkheeran.in/cdn/farfuture/dZqeCUx6jo9Mam_2jVAdjruVfF8p2-TkimVjQuGsjDc/1586672760/sites/default/files/inline-images/pudukkotai9_0.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தனிபை்படுத்திக் கொண்டுள்ளனர். தனிமையில் இருப்பவர்கள் தொடர்ந்து கரோனா பற்றிய செய்திகளை பார்த்து அச்சப்படுவார்கள், இதனால் மன உளைச்சல் ஏற்படும் என்பதால் கிராம நிர்வாக அலுவலர் ராஜா தலைமையிலான வருவாய் துறையினர் அனைவர் வீடுகளுக்கும் சென்று அவர்களை கண்காணித்து விசாரணை செய்ததுடன் அவர்களின் மனநிலையை பாதுகாக்கும் பொருட்டு நல்ல புத்தகங்களை வழங்கினார்கள்.
![h](http://image.nakkheeran.in/cdn/farfuture/7FdTnEJ1KZ14BY13L7T7s0USaJF6FRmwLlVLnQ6HKTo/1586673197/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif%20-%20Copy_3.gif)
இது குறித்து வருவாய் துறையினர் கூறும் போது, "அனைத்து செய்திகளும் கரோனா பற்றியே வெளிவருவதால் தனிமையில் உள்ளவர்கள் அதைப்பார்த்து உளவியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தான் நல்ல புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லி வருகிறோம்" என்றார்.