Published on 05/04/2020 | Edited on 05/04/2020
கரோனா ஊரடங்கால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களில் அன்றாடம் தினக் கூலி செய்து பிழைப்பு நடத்தி வந்த கூலித் தொழிலாளிகளும் அடங்குவர். கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரை கூலித் தொழிலாளர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![PUDUKKOTTAI DISTRICT DAILY WAGES FORMER VILLAGE PRESIDENT HELP THEM](http://image.nakkheeran.in/cdn/farfuture/wD6QRKCZqcVSbbZNB3SHDdT6GPtijzCfp5HMxhbXTlI/1586056217/sites/default/files/inline-images/P2_4.jpg)
இப்படி புதுக்கோட்டை நகரில் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பசியோடு தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் புதுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சேட் 5 கிலோ அரிசி, மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை வேலை இழந்து வீட்டி்ல் தவித்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.