Skip to main content

ஒன்றரை கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக தனியார் சிட் பண்ட் மீது பொதுமக்கள் புகார்

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
Public complaint on private Sid Fund


கோவையில் பல்வேறு கிளைகளை கொண்ட தனியார் சிட் பண்ட் நிறுவனம் பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஒன்றரை கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக கூறி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர். 
 

 

 

கோவையில் உள்ள தனியார் சிட் பண்ட் நிறுவனம், டவுன்ஹால், பூ மார்க்கெட், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் சிட் சேர்ந்து வந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் இந்த நிறுவனத்தை பூட்டி விட்டு சென்று உள்ளனர். நிறுவனத்தின் உரிமையாளர் முரளிதரன், பொதுமக்களின் பணத்தை விரைவில் அளிப்பதாக கூறி உள்ளார். 
 

 

 

ஆனால் மூன்று மாதங்களாகியும் பணத்தை திருப்பி கொடுக்காமல், ஏமாற்றுவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோவை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர். ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு, ஏமாற்றி உள்ளதாகவும், இதனால் உடனடியாக சிட் நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்து தங்களது பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்ற மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வி.ஜே. சித்து மீது புகார்; காவல்துறை விளக்கம்!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Police explanation for Complaint against VJ Sidhu

பிரபல யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “நான் இன்று காலை ஏழுமணி அளவில் யூடியூபில் விஜே சித்து விலாக்ஸ் (VJ Siddhu vlogs) சேனலில் ஒரு வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதில் விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரக்கிதையாகவும் செல்போனில் பேசியபடி வாகனத்தை ஏர்போர்ட் மீனம்பாக்கம் ரோட்டில் ஓட்டிக்கொண்டும் அதனை யூட்யூப்பிலும் பதிவேற்றம் செய்தும் உள்ளார். இதைப் பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும்.

அது மட்டுமல்லால் அவருடைய வீடியோவில் ஆபாசமான வார்த்தைகளையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி உள்ளார். இது குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தவறாக பேசும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர் மீது செல்போனில் பேசியபடி வாகனத்தை ஒட்டிக்கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் சட்டவிதிகளை மீறியதற்காக தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Police explanation for Complaint against VJ Sidhu

இந்நிலையில் இந்தப் புகார் குறித்து சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிரான புகார் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியில் (12.11.2023) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- படம் : எஸ்.பி. சுந்தர்

Next Story

திருச்சியிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
case has been filed against YouTuber savukku Shankar in Trichy too

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல்  அளித்திருந்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி கைது செய்தனர். இதனிடையே சவுக்கு சங்கர் தேனியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த போது, அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் சவுக்கு சங்கர் மீது இரண்டாவதாக வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கிலும் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனிடையே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கர் மீது பெண் பத்திரிகையாளர் சந்தியா புகார் அளித்துள்ளார். அதில், கோலமாவு சந்தியா என்ற பெயரில் தன்னைப் பற்றி இழிவாக கட்டுரை எழுதி, சவுக்கு சங்கர் இணையதளத்தில் வெளியிட்டார். இதன் காரணமாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கு வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், ஆபாசமாக பேசுதல், அனுமதியின்றி பின்தொடர்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரி குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும்  சவுக்கு சங்கர் கூறிய கருத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்று சேலம் பெண் உதவி ஆய்வாளர் கீதா சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், ஆபாச வார்தைகளில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறாக பேசுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து திருச்சியிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மற்றும் பெண் காவலர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது, ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுப்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சவுக்கு சங்கர் மீது கோவை, தேனி, சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது திருச்சியிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.