தமிழக அரசியல்வாதிகள் டெண்டர்களில் கமிஷன் வாங்கி பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் எங்கள் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளை கொடுக்காமல் கொடுத்தாக கணக்கு காட்டி கைதியையும், அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறார்கள். இது குறித்து இது வரை எந்த செய்தியும் வெளிவந்ததே இல்லை என்று சில கைதிகளும், சிறைத்துறையில் உள்ள சில அதிகாரிகளும் நம்மிடம் பேசினர்,
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 88 ஆண்களுக்கான கிளைச் சிறைகள், 8 பெண்கள் கிளைச் சிறைகள், ஆண்களுக்கான 2 தனி கிளைச் சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளி, 3 திறந்தவெளிச் சிறை என மொத்தம் 138 சிறைகள் இருக்கிறது. இவற்றில் 22,332 கைதிகளை அடைக்க இடவசதி உள்ளது.
அவர்கள் நம்மிடம் பேசினதை அப்படியே தருகிறோம்…
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு 3 வேலை சாப்பாடு மற்றும் காலையில் மட்டும் டீ தமிழக அரசு சிறைதுறை நிர்வாகத்தின் கீழ் வழங்குகிறது. இதற்காக மட்டும் பல கோடி ரூபாய் செலவாகிறது.
திங்கள் மற்றும் வியாழன் நாட்களில் காலை உணவாக அரிசி உப்மா பொட்டுக்கடலை தேங்காய் சட்னியும், செவ்வாய் மற்றும் சனி நாட்களில் மிளகு பொங்கல் பொட்டுக்கடலை தேங்காய் சட்னியும், ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் கஞ்சி வெங்காய சட்னி வழங்கணும்.
இது இல்லாமல் புதன் கிழமை மதியம் தவிர எல்லா நாட்களும் மதியம் ஒரு கைதி ஒருவருக்கு 50 கிராம் வீதம் பருப்பு மற்றும் சாம்பாரும், காய்கறி நபருக்கு 250 கிராம் பொரியல் சேர்த்து வழங்க வேண்டும். மாலையில் கைதி ஒருவருக்கு 50 கிராம் வீதம் பருப்பில் சாம்பார் வழங்கணும்.
தினமும் மாலை கைதி ஒருவருக்கு 60 கிராம் நிலக்கடலை அவித்து கொடுக்கணும். புதன் மதியம் உருளைக்கிழங்கு கூட்டு. வியாழன் மதியம் கீரை சாம்பார். இதில் ஞாயிறு மட்டும் ஸ்பெஷலாக மதியம் கைதி ஒருவருக்கு 115 கிராம் (சமைக்கிறதுக்கு முன்பு ) வீதம் கோழிக்கறி கிரேவி. கொடுக்க வேண்டும்.
திங்கள் மதியம் புளிசாதம், புதன் மதியம் தேங்காய் சாதம், வெள்ளி கிழமை தயிர் சாதம் கூடுதலாக வழங்க வேண்டும் இது இல்லாமல் எல்லா நாட்களிலும் மதியம் மோர் வழங்கணும் என்று தமிழக அரசு சிறைத்துறை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது பிரச்சனையே (இந்த மெனு படி போடுவது இல்லை) தினமும் காலை வெள்ளை சாதம், புளி சட்னி.... மதியம் வெள்ளை சாதம் சாம்பர் மட்டுமே கொடுக்கிறார்கள்.
இது இல்லாமல் ஒரு கைதிக்கு மோர் 80 மில்லி, பால் 120 மில்லி பால் ஒரு கைதிக்கு. அரிசி காலையில் 100 கிராம், மதியம் 200 கிராம், மாலை 170 கிராம், பருப்பு காலை 50 + மதியம் 50 ஆக 100 கிராம், ஒரு நாள் கிராம் கணக்கில் சாம்பார் தூள் 10 கிராம், மிளகு 5 கிராம் ,சீரகம் 4 கிராம்,பொட்டுக்கடலை 20 கிராம் ,கடலைப்பருப்பு 20 கிராம், கடுகு 2 கி ராம் , புளி 30 கிராம் ,மிளகாய் வத்தல் 5 கிராம் ,sunflower ஆயில் 35 மில்லி ,நல்ல எண்ணை 15 மில்லி , (பால் ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு 120 மில்லி ) இப்படி ஒரு கைதிக்கு அளவு ,எடை என்கிற பட்டியல் அரசாங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை இருந்தாலும் இந்த உணவு பொருட்கள் 25 சதவீதம் தான் கொடுக்கப்படுகிறது.
மீதம் 75 சதவீதம் கொடுத்தாக கணக்கு காட்டப்படுகிறது. இந்த கணக்கு காட்டப்படும் பணத்தில் மட்டும் பல லட்சம் மாதம் பணம் கிடைக்கிறது.
முன்னாடி எல்லாம் சாப்பாடு சரி இல்லை என கைதிகள் தட்டு கவிழ்த்து போராடுவார்கள் தற்போது 80 சதவீதம் கைதிகள் சிறை உணவை சாப்பிடுவதில்லை சிறை உள்ளே உள்ள காவலர் ஹோட்டலில் தேவையான அனைத்தும் ஆர்டர் கொடுத்தால் தேவையான அனைத்தும் கிடைக்கும் என்பதால் சிறை ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள்.
இதனால் சிறை உணவை 80 சதவீதம் பேர் சாப்பிடாததால் அரசு உணவு பொருள் மிச்சம் உணவு பொருட்கள் கைதிகளுக்கு கொடுப்பது போல் கணக்கு காட்டி அதன் மூலமே கைதிகளினால் பணமழை பொழிந்து சிறைத்துறை அதிகாரிகள் பல பேர் கோடிஸ்வரர்களாக மாறி கொண்டிருக்கிறார்கள். இது தான் சிறைகளிலும் இந்த நிலை தான்...
இது குறித்து சிறையில் இருந்து வெளியே வந்த கைதி ஒருவர் நம்மிடம், அரசு விடுதிகளில் அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியர் , அமைச்சர் போன்றவர்கள் விசிட் அடித்து சோதனை செய்வார்கள். ஆனால் சிறைகளில் சிறை அதிகாரிகள் தான் பார்ப்பார்கள். இதனால் சிறைச்சாலையில் கைதிகளுக்கு நடக்கும் அநீதியும், அவர்கள் பெயரை பயன்படுத்தி அதிகாரிகளும் கொள்ளையடிக்கிறார்கள்.
நீதிபதிகள் , மாவட்ட ஆட்சியர் போன்ற தீடீர் என யாருக்கும் தகவல் சொல்லாமல் சோதனை செய்தால் பல இலட்ச கணக்கான கொள்ளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. கைதிக்கு முழுமையான ரேசன் கொடுக்காததால் கைதி சிறையில் கட்டுப்பாட்டில் இல்லை ஏதாவது அதிகாரிகள் கைதி கிட்ட கேள்வி கேட்டால் எங்க ரேசன் பொருட்களை நீங்க திருடி திங்குறீங்க கைதி ரேசனை முழுசா போட்டு விட்டு பேசுங்கள்'னு ஒவ்வொரு கைதியும் சண்டைப்போட்டு போடுகிறார்கள்.
தற்போது தமிழக சிறை துறை அதிகாரிகள் 2005, ஆண்டு 2011 ஆண்டு, TNPSC மூலம் பணிக்கு வந்தவர்கள் தான் DIG ஆகவும் கண்காணிப்பாளராகவும் உள்ளார்கள் தற்போது அவர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளார்கள்.
கடலூர் மத்திய சிறையில் ஏடிஜிபி ஆபாஷ்குமார் தற்போது ஆய்வில் இருக்கிறார் 26.12.19. இவர் வருவதை முன்னிட்டு சிறை உள்ளே உள்ள ஹோட்டல் மூடபட்டது காரணம் கைதி தேநீர் விடுதி வைக்க தான் அனுமதி இருக்கு அங்கே டீ மட்டும் கொடுக்க வேண்டும் ஆனால் அந்த கடையில் ஆட்டு கறி வறுவல்,கறி குழம்பு, தலை கறி & குழம்பு, குடல் குழம்பு, சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், ஆட்டு ஈரல், ஆட்டுக்கறி, பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, குஷ்கா, வெள்ளை சாதம், சாம்பார், புளிக்குழம்பு ,வற்றல் குழம்பு, ரசம், புரோட்டா, இட்லி ,தோசை,ஆம்பெல்ட், ஆப்ஆயில், முட்டை தோசை, கேசரி, வடை, பாயசம் ,பூரி , எக் ரைஸ், சிக்கன் ரைஸ், மேலும் கைதிகள் ஆர்டர் கொடுத்தவுடன் செய்து கொடுக்கிறார்கள்.
சிறை அதிகாரிகள் ரேங்க் ஏற்ற மாதிரி லஞ்சம் கொடுக்க வேண்டும் ஹோட்டல் வைத்து இருக்கும் காவலர்கள் ஏடிஜிபி விசிட் வந்த ஒரு நாள் ஹோட்டல் இயங்கவில்லை கைதிகள் சிறை உள்ளே உள்ள ஹோட்டலில் சாப்பிடுவதால் அரசு உணவு பொருட்கள் மிச்சம் இதனால் பல லட்சம் அதிகாரிகளுக்கு வருமானம் ரேசன் ஸ்டோர் சிறையில் உள்ளே உள்ள ஹோட்டல் இரண்டு பக்கமும் வருமானம் அதிகாரிகளுக்கு கிடைக்கிறது.
ஹோட்டல் வைத்திருக்கும் காவலர் தினமும் 1200 கட்டு பீடி சிறை உள்ளே கொண்டு வந்து விற்பனை செய்கிறார். ஒரு கட்டு பீடி 100 ரூபாய் என விற்பனை செய்கிறார்கள். இதற்கு வேறு கமிஷன் தொகை சிறை அதிகாரிகளுக்கு கிடைக்கிறது என்றார்கள்.