Published on 16/04/2019 | Edited on 16/04/2019
நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் அரசியல் தேர்தல் களம் சூடுபிடித்து இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருக்கின்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்குமேல் அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் தேர்தல் பற்றி பேசக்கூடாது. தொலைக்காட்சி பேட்டியிலும் தேர்தல் பற்றி பேசக்கூடாது என தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யாபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் தேர்தல் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.