Skip to main content

பொங்கல் ஸ்பெஷல்: சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில், எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில்கள்! 

Published on 02/01/2019 | Edited on 02/01/2019

ச்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவில், எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவில், எர்ணாகுளத்திற்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. 


நாகர்கோவில் - சென்ட்ரல் (82644) இடையே சுவிதா  சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில், ஜனவரி 2, 2019 (இன்று) மற்றும் ஜனவரி 16ம் தேதிகளில்  மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு  சென்றடைகிறது.


சென்னை சென்ட்ரல் & நாகர்கோவில் (06007) இடையே, ஜனவரி 1, பிப்ரவரி 26ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும். இதேபோல், சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் (82637) இடையே ஜனவரி 11ம் தேதி இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.30 மணிக்கு எர்ணாகுளத்திற்கு வந்தடைகிறது.


நாகர்கோவில் - சென்ட்ரல் ரயில் (06008) இடையே ஜனவரி 9, 23, 30 மற்றும் பிப்ரவரி 6, 13, 20, 27ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடைகிறது.


சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் (06005) இடையே பிப்ரவரி 1, 22ம் தேதிகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளத்திற்கு சென்றடைகிறது. 


எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் (06006) இடையே  இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், பிப்ரவரி 3, 24ம் எர்ணாகுளத்தில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தடைகிறது. 


இந்த சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக எர்ணாகுளத்திற்கு செல்கின்றன. 


அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செல்கின்றன. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 


இவ்வாறு சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்