Published on 22/04/2021 | Edited on 22/04/2021
![Polytechnic student drowns in well](http://image.nakkheeran.in/cdn/farfuture/6MNS863tZPde9UUj_QBYneWZSY9XfjFUvubxdq6Zjgk/1619089617/sites/default/files/inline-images/ete4643.jpg)
கள்ளக்குறிச்சியில் கிணற்றில் குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலிடெக்னிக் மாணவரான ராகுல் என்பவர் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக ராகுல் கிணற்றுக்குள் மூழ்கினார். இதுதொடர்பாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மீட்புப்படையினர் கிணற்றில் இறங்கி ராகுலின் உடலை தேடிவந்தனர்.
சுமார் 5 மணி நேரத் தேடலுக்குப் பின் ராகுலின் உடல் கைப்பற்றப்பட்டது. அவரது உடல் உடனடியாக பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.