கடலூர் மாவட்டத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது வேப்பூர் காவல் நிலையம். இங்கு போலீசாக பணி செய்பவர் ரமேஷ். இவரை தான் ஒரு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து கட்டிப்போட்டு விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அப்படி என்ன தவறு செய்தார் அந்த போலீஸ்காரர் ரமேஷ்? பக்கத்து கிராமத்தில் இருந்து குடும்ப பிரச்சனைக்காக புகார் கொடுக்க வந்தார் ஒரு பெண்மணி. அந்த பெண்ணை பார்த்து ஜொள்ளு விட்டார் ரமேஷ். இதற்காக அந்த ஊருக்கே அடிக்கடி போனார். அந்த பெண் பிடி கொடுக்கவில்லை.
அவரது பக்கத்து வீட்டு பெண்ணை நோட்டம் விட்டதோடு, யார் மூலமோ அவரது செல்போன் எண்ணை கண்டுபிடித்து தினசரி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் ரமேஷ்.
இவரது தொல்லை தாங்க முடியாத அந்த பெண், தன் குடும்பத்தினரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். அவர்கள் தங்கள் ஊர் முக்கியஸ்தர்களிடம் சொல்ல, அந்த போலீசுக்கு தக்க பாடம் கற்று கொடுக்க திட்டமிட்டனர். அதன்படி கடந்த 10ம் தேதி இரவு 8 மணிக்கு அந்த பெண் மூலம் போலீஸ் ரமேஷை தன் வீட்டுக்கு வரவழைத்தார்கள்.
ரமேஷ் வீட்டுக்குள் பந்தாவாக நுழைந்தார். அப்போது மறைவாக இருந்தவர்கள் ஓடி வந்தனர். ரமேஷை அடித்து துவைத்த அவர்கள், அங்கேயே கட்டிபோட்டுவிட்டு வேப்பூர் போலீசுக்கு போன் போட்டார்கள். வீட்டுக்குள்திருட வந்த ஒரு திருடனை கட்டிப்போட்டுள்ளோம் உடனே வரவும் என தகவல் கொடுத்தனர்.
இதைக்கேட்ட எஸ்.ஐ. டைமண்ட் துரை தலைமையில் போலீஸ் படையினர் அந்த வீட்டுக்கு பறந்து சென்றது. அங்கே தங்கள் சக போலீஸ் ரமேஷின் செயலை பார்த்து கேட்டு வெட்கி தலைகுனிந்தது. சக போலீஸ் என்பதால் அவரை மக்களிடம் இருந்து மீட்டு பாதுகாப்பாக அனுப்பி விட்டு டைமண்ட் துரை பொதுமக்களிடம் தாறுமாறாக பேசி தன் காக்கி சட்டை வீரத்தை காட்ட, கோபமடைந்த ஊர் மக்கள் அவரையும் சிறை பிடித்தனர்.
இந்த விவகாரத்தை திட்டக்குடி டிஎஸ்பி தங்கவேலுக்கு தெரிவித்தனர். அவர் ஊர் மக்களிடம் சுமூகமாக பேசி சம்பந்தப்பட்ட பெண்ணை புகார் கொடுக்க சொல்லுங்கள், அந்த ரமேஷ் போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகே டைமண்ட் துறையை விடுவித்துள்ளனர்.
ரமேஷ் ஏற்கனவே வரம்சரம் காவல் நிலைய்ததில் பணி செய்தபோது பல பெண்களிடம் தன் காம கைவரிசையை காட்டி பிரச்சனையின் அடிப்படையில் அதிகாரிகள் அவரை வேப்பூருக்கு மாற்றியுள்ளனர். இங்கு வந்த பிறகும் அவர் காமசேட்டை மாறவில்லை. நான்கு கிராம பெண்களிடம் தனி தனியாக தன் கைவரிசையை காட்டியுள்ளார். அவர்கள் துரத்தியடித்துள்ளனர். இந்த விஷயம் சக அதிகாரிகளுக்கு தெரிந்தும் கூட பிரச்சனையை மூடி மறைத்துள்ளனர். இப்போது தானே போய் வலிய மாட்டிக் கொண்டார் ரமேஷ்.