Skip to main content

மோடி வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

Published on 12/04/2018 | Edited on 12/04/2018
TH_ADYAR_BRIDGE


பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னைப் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வழியாகச் செல்லும் வாகனங்கள் சின்னமலை வழியாக, நந்தனம் சந்திப்பிற்கு சென்று திரு.வி.க பாலம் வழியாக அடையாறு செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அடையாறில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள், டைடல் பார்க் வழியாக எஸ்ஆர்பி டூல்ஸ் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

மூப்பனார் பாலம் வழியாக காந்தி மண்டபம் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அடையாறு செல்ல வேண்டிய வாகனங்கள் சேமியர்ஸ் வழியாகவும், விமான நிலையம் செல்ல வேண்டிய வாகனங்கள் நந்தனம் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்