கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-ம் அணி) காவலர் முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அமர்நாத் (25). இவர் கடந்த 2016ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-ம்) அணியில் தற்போது பணிபுரிந்து வந்துள்ளார். அமர்நாத் நேற்று இரவு வழக்கம் போல் 10 மணி வரை பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று அதிகாலை வளாகத்தில் உள்ள காவல்துறையினர் வழக்கம் போல பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்த போது வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அமர்நாத் இருந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்ட சக போலீசார் சரகத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் காவலரின் தற்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். காவலர் ஒருவர் முகாமில் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.