காவல்நிலையத்தில் இரவுப்பணியின்போது பெண் போலீசை மூத்தமிட்ட எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட எஸ்.பியிடம் , பெண் போலீஸ் சசிகலா, இரவு பணியின் போது எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் என்னை மானபங்கபடுத்தி விட்டார். எனக்கு பயங்கர மன உளைச்சலா இருக்கு என்று அழுது புகார் கொடுத்தார். புகார் தந்த உடனே அதிரடி நடவடிக்கை எடுத்து எஸ்.பி. அந்த எஸ்.ஐ.யை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட செய்யப்பட்டதை அறிந்த எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன், நாங்கள் இருவரும் எப்போதும் இப்படி தானே இருப்போம். என் மீது மட்டும் ஏன் நடவடிக்கை. நடவடிக்கை எடுத்தால் இரண்டு பேர் மீதும் எடுங்கள் என்று புகார் கொடுக்க, மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பி. ராதகிருஷ்ணன் தலைமையில் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார்.
காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய டி.எஸ்.பி ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார் எஸ்.பி. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் இரவு 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். அப்போது சசிகலா போலீஸ் பணியில் இருந்தார். சில நொடிகளில் அந்த சசிகலா அருகில் செல்லும் எஸ்.ஐ, அவருக்கு ஒரு முறை முத்தம் கொடுத்துவிட்டு, அவரிடம் பேச்சு கொடுக்கிறார். சில நொடிகளில் அந்த பெண் போலீசின் முகத்தை பிடித்து இழுத்து முத்தம் கொடுக்கிறார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையை அடுத்து திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் பாலசுப்பிரமணியன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.