காவல்நிலையம் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்திற்கு வந்தனர். மோட்டார் சைக்களை காவல் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு, சிறிது நேரம் நடந்து சென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து காவல் நிலையம் மீது வீசினர்.
அதன் பின்னர், அவர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காவல் நிலையம் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.