Skip to main content

ஈஷா மையத்தின் மயானத்திற்குத் தடை விதிக்க வேண்டும்; வலுக்கும் எதிர்ப்பு

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Petition to Collector seeking ban on Isha Center graveyard

கோவையில் பல்வேறு பகுதியில் ஈசா மையத்தின் மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது. இன்னும் கூடுதலாக மின் மயானங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முன்னதாக.. ஈஷா யோகா மையம் ஒரு மதம் சார்ந்த அமைப்பாக இருப்பதால்.. குறிப்பிட்ட சடங்குகளைப் பின்பற்றும்படி மக்களை கட்டாயப்படுத்தக்கூடும் என்று பொதுவாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கிடையில், ஈஷா யோகா மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எந்தவொரு பாரம்பரியத்தையும், வழக்கத்தையும் பின்பற்ற யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், சுடுகாட்டில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சடங்குகளைப் பின்பற்றலாம் என்றும் கூறினார். நகரத்தில் ஈஷா நடத்தும் தகன அறைகளை அனைத்து சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் பயன்படுத்துகின்றனர், இதுவரை யாரும் புகார் செய்யவில்லை,” என்றார்.

இந்நிலை செம்மேடு பகுதியில் ஈஷா யோகா நிறுவனம் சார்பில் இக்கரை போளுவம்பட்டி பகுதியில், மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பெரியார், அம்பேத்கர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து அவர்கள் கூறுகையில், அப்பகுதியில் ஏற்கனவே சுடுகாடும், இடுகாடும் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், ஈஷாவில் மர்ம மரணங்கள் தொடர்வதாகவும் இது குறித்து பலமுறை போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், வேண்டுமென்றே மின் மயானம் அமைய உள்ளதாக குறிப்பிட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஈஷாவின் மின் மயான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர். மேலும் அங்கு ஈஷாவின் மின் மயானம் அமைந்தால் அனைத்து அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் இக்கரை போலுவம்பட்டி கிராமத்தில், ஈஷா யோகா சார்பில் அமைய உள்ள மின் மயானத்திற்கு, தடை விதிக்க கோரி.. பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; ஆட்சியர் மாற்றம்; எஸ்பி சஸ்பெண்ட்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Counterfeiting liquor issue; Change of Collector; SP Suspend

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மறுபுறம் கள்ளச்சாராயம் குடித்ததாலேயே நான்கு பேர் இறந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை மேற்கொண்டு வந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்; சுரேஷ், பிரவீன், சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா ஆகியோர் எனத் தெரியவருகிறது.

Counterfeiting liquor issue; Change of Collector; SP Suspend

இந்நிலையில் 10 பேரின் உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலி?; மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Explanation of the District Collector on 4 people died after drinking fake liquor

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நேற்று (18-06-24) இரவு, 10க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாரயம் குடித்து வயிற்று வலியாலும், கண் எரிச்சல் பாதிப்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்களில், தற்போது வரை 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 7க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 4 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பு வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உயிரிழந்த குடும்பத்தினர் தெரிவிக்கையில், கள்ளச்சாராயம் குடித்துதான் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவிக்கையில், ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை. கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியைப் பரப்புகின்றனர். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதில் குடிப்பழக்கமே இல்லாத ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதனால் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.