Skip to main content

மேத்யூ கையில் பென்டிரைவ்!  முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை சிக்கப்போகிறார்கள்!!  ஐ.பெரியசாமி பகீர் பேச்சு!

Published on 26/01/2019 | Edited on 26/01/2019

 

p


தேனி மாவட்ட திமுக மற்றும் மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தேனி பங்களா வீட்டில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் போடி ராஜவெங்கடேசன் தலைமை தாங்கினார். அதுபோல் தேனி ஒன்றிய கழக பொறுப்பாளர் சக்கரவர்த்தி மற்றும் தேனி நகர கழக பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.  


இக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரும்,  கழகத் துணை பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி பேசும்போது......

’’ தேனி மாவட்டம் திமுகவின் கோட்டை.  அதை யாரும் மாற்ற முடியாது.  முல்லைப் பெரியாறு தண்ணீர் மூலம் நெல் நட்டு அதை அறுத்து களத்தில் போட்டுவிட்டு வீட்டில் போய் படுத்து அதனால தான் வெற்றி பறிபோய்விட்டது.  நம்ம வெற்றியை குறுக்கு வழியில் கடந்த தேர்தலில் திருடிவிட்டனர்.  அதுதான் உண்மை.  அதனால வரும் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்.  அதற்கு தயாராக இருங்கள்.  உலகத்தில் தமிழன் இல்லாத நாடே கிடையாது.  அது போல் தகவல் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முதல் இடமாக இருந்தாலும் அதற்கு தமிழன்தான் மூலகாரணமாக சுந்தர் பிச்சை போல் இருக்கிறார்கள்.  அது போல் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் தமிழன் போல் அறிவு ஆற்றல் பெற்றவர்கள் யாரும் கிடையாது.  

 

p

 

ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கிராமங்கள்தோறும் தமிழன் எழுந்து தமிழ் மொழியை காக்க சிறைக்குப் போனார்கள்.  தலைவர் கலைஞர் 14 வயதிலேயே ஹிந்தியை எதிர்த்து குரல் கொடுத்தார்.    தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்றுத் தந்தார்.  அதுபோல் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வரவேண்டும் என்பதற்காக சேது சமுத்திரம் திட்டம் கொண்டு வந்தார்.  காவேரி நடுவர் நீதிமன்றம் அமைத்தார் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் திறக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.  100 நாள் வேலை கொண்டுவந்தார் கிராமங்கள் தோறும் உள்ள மக்களுக்கு 3 சென்ட் நிலமும் கொடுத்தார்.  அதுபோல் மத்திய அமைச்சரவையில் திமுக  பங்கு பெற்றதின் மூலம் தான் இந்திய அளவில் 50 காசு மூலம் தொலைபேசியில் பேசுவதற்கான முன்னேற்றமே  வந்தது.

 நான் ஒருமுறை கொடைக்கானல் மேகமலைக்கு சென்றபோது  அங்கு  போன் டவர் கிடைக்காது என்று சொன்னார்கள்.  உடனே நான் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதிமாறனிடம் பேசி  விஷயத்தைச் சொன்னேன்.  அடுத்த ஒரு மாதத்திலேயே கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலைக்கு எல்லாம் போன் வசதி வந்தது.  அதுபோல் கேஸ் சிலிண்டர் விலை 300 ரூபாய் இருந்ததை  350 ரூபாய் யாக உயர்த்தி  மத்திய அரசு கொண்டு வந்தது.  ஆனால் 50 ரூபாய் மக்களின் சுமையாக இருக்கும் அதை நாமே கொடுத்துக் கொள்ளலாம் என்று கூறி 50 ரூபாயை மத்திய அரசுக்கு மாநில அரசு கொடுத்தது.   மக்களின் சுமையை குறைத்தார்.  ஆனால் தற்பொழுது 1,050 ரூபாய் உயர்த்தி விட்டனர் அதுபோல் மண்ணெண்ணெய் தற்பொழுது மக்களுக்கு கிடைப்பதில்லை ஆனால் தலைவர் ஆட்சியில் மண்ணெண்ணெய் பட்டிதொட்டிகள் முதல் முழுமையாக கொடுத்து வந்தோம்.  அந்த அளவுக்கு  மக்களின் நலனுக்காக  பல திட்டங்களை தலைவர் கொண்டுவந்தார் தலைவர்.  ஆனால் இப்ப  அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறி அம்மா வாங்கிய 12 /  கமிஷனை 30% ஆக  உயர்த்தி வாங்கிக்கொண்டு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.

 

p

 

கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அனைத்து அமைச்சர்களையும் கொட நாட்டுக்கு அழைத்து சொத்துக்களையெல்லாம் எழுதி வாங்கினார்.  அதனுடைய ஆதாரமெல்லாம் பென்டிரைவ்’ல் இருக்கு.  அந்த பென்டிரைவ்  தற்பொழுது  மேத்யூவிடம் இருப்பதால் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை சிக்கப் போகிறார்கள். அதனாலதான்  பதவி விலகச் சொல்கிறோம். 

 

  மீடூ விவகாரத்தில் மத்திய அமைச்சர் மீது குற்றம் சாட்டினார்கள்.  உடனே அந்த மத்திய அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதை எதிர்கொள்கிறார்.   அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வீட்டில் ஆர்கே நகருக்கு 89 கோடி கொடுக்க இருந்த அமைச்சர்களின் பட்டியல் இருந்தது.  அதன் மூலம் மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.   தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைக்க பிஜேபி மிரட்டி வருகிறது.  அதற்கு அடிபணிய வில்லை என்றால் அமைச்சர்கள் மீது வழக்குப் போட தயாராக இருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு அதிமுகவின் குடுமி பிஜேபியின் கையில் இருக்கு.  அதன் மூலம் தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள் .   இப்படிப்பட்ட பிஜேபிக்கு வரும் தேர்தலில் ஓட்டு போட்டால் இலவச மின்சாரத்தையே  ரத்து செய்து விடுவார்கள் ’’என்று கூறினார்
.    

இந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் தேனி மாவட்ட பொறுப்பாளரும். முன்னாள் எம்எல்ஏவுமான கம்பம் ராமகிருஷ்ணன். தலைமை கழக பேச்சாளர் கலைமணி பாரதி. முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும் மாநில தீர்மானக்குழு இணை செயலாளருமான ஜெயக்குமார்,  முன்னாள் போடி எம்எல்ஏ லட்சுமணன்,  விவசாய தொழிலாளர்அணியின் மாவட்ட அமைப்பாளர் தேனி ஜீவா மற்றும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஆன பால்பாண்டி,  ராஜா,  விஜய் , பாஸ்கரன், தமிழன் , ஜெயக்குமார்.,  சேகர் ,.முத்துக்குமார்,மணிகண்டன், ஜெயக்குமார், தங்கப்பாண்டி ,அமர்நாத் , பிரபாகரன் , மோகன், கோபாலகிருஷ்ணன், மற்றும் மற்றும் தேனி நகர மாணவரணி அமைப்பாளர் முருகன் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஞானச்செல்வம் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்