Published on 19/07/2020 | Edited on 20/07/2020

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவராகச் செயல்பட்டு வந்தவர் நிலவழகன் என்ற சுபாஷ். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர் இன்று(19.07.2020) ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.