Skip to main content

சிதம்பரம் அருகே அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

chithamparam incident

 

காட்டுமன்னார்கோவில் அருகே ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மனைவி சுமிதா. வயது 36. இவர் சிவக்கம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சனிக்கிழமை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது பெண்ணின் உடல்நிலை ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளது இதனையறிந்த மருத்துவர்கள் அவசர ஊர்தி மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது வரும் வழியில் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பால அறவாழி நல்ல உடல் தகுதியுடன் இருந்த பெண், சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார். அவரது உடற்கூறு ஆய்வை சிதம்பரம் மருத்துவர்கள் அல்லாத வேறு மருத்துவர் குழு செய்ய வேண்டும். இதனை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர்தான் அவரது உடலை வாங்குவோம் என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்