இன்றைய பஞ்சாங்கம்
17-12-2024, மார்கழி 02, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பகல் 10.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 12.44 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசி பலன் - 17.12.2024
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் பாதியில் தடைப்படலாம். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். சிக்கனமாக இருப்பதன் மூலம் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வேலையில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது.
சிம்மம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். கடன் பிரச்சினைகள் தீரும்.
கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மறைந்து முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்
இன்று நீங்கள் பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். புதிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவீர். கடன் சுமை ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
கும்பம்
இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். தேவைகள் நிறைவேறும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீண் பேச்சால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்பட இடையூறு இருந்தாலும் லாபம் கிட்டும். வேலைபளு சற்று குறையும்.