Skip to main content

2030க்கு பிறகு மின்சார கார்கள் வரப்போகிறது என்கிறார் மோடி பிறகு ஏன் விளைநிலங்களை பாழாக்கத்துடிக்க வேண்டும்; திருக்கரவாசலில் விளாசிய பழ.நெடுமாறன்!!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

திருவாரூர் மாவட்டம் திருக்கராவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், 

 

pazha nedumaran support thirukkaravasal people protest!!

 

"சங்க காலத்தில் இருந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி திகழ்ந்து வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விளைநிலங்களை அழித்து வருகிறது. வேளாண்மை நிலங்களை நாசமாக்கினால் இந்த மக்கள் என்ன செய்வது மக்கள் வாழையடி வாழையாக  இங்கு வசித்துவரும் நிலையில் தாங்களும் வாழ்ந்து மக்களையும் வாழ வைத்து வருகிறார்கள். 

 

pazha nedumaran support thirukkaravasal people protest!!

 

இன்றைய நவீன உலகில் பெட்ரோலிய பொருட்களின் தேவை மிகவும் குறைந்து வருகிறது. 2030ஆம் ஆண்டு பெட்ரோலிய காரே கிடையாது என மோடி அரசு அறிவித்துள்ளது. இதன் பின்னர் மின்சாரகார்கள் தான் 2030க்கு பிறகு வர உள்ளது. எனவே இன்னும் பதினொரு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதால் என்ன பயன். காவிரிப்படுகையை பாதுகாப்பதற்குதான் இப்பகுதி மக்கள் போராடுகிறார்களே தவிர சொந்த நலனுக்காக அல்ல எனவே இத்திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் குமுறி எழுவார்கள்". என தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்