தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த சிறுமி ஊஞ்சல் ஆடும் போது கழுத்தை கயிறு நெருக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம். கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஆசாத் நகரை சார்ந்தவர் முத்தப்பா. இவரது மனைவியின் பெயர் சாந்தம்மா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியின் மூத்த மகளின் பெயர் சஞ்சனா (வயது 11). இவர் அங்குள்ள மொரஜி தேசாய் உறைவிட பள்ளியில் தங்கியிருந்து ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சஞ்சனா தனது வீட்டுக்கு வந்துள்ளார். அவள் வீட்டில் ஊஞ்சல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஊஞ்சல் ஆடுவதை பழக்கமாக வைத்துள்ளார். பெற்றோர்கள் வேலை சம்மந்தமாக வெளியே சென்ற நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த சஞ்சனா ஊஞ்சலில் விளையாடியுள்ளார். எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கயிறானது கழுத்தில் இறுக்கி சிறிது நேரத்தில் பரிதாபாமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த சஞ்சனாவின் பெற்றோர் தங்களது மகள் ஊஞ்சல் கயிறு இறுக்கி இறந்துபோனதை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சஞ்சனாவின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.