ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான இந்தாண்டு 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 10 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இலக்கியம், கலை உள்ளிட்ட சேவைகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படவுள்ளது. அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு, தாமோதரன், தட்சிணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன், தேவசேனாதிபதி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கலைத்துறையில் நடிகர் அஜித் குமார், நடிகை சோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தினமலர் லட்சுமிபதி ராம சுப்பையார் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்ம விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாவர் அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசின் பத்மபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜீத்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும் வாழ்த்துகள். பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி. ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடைய வேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.