வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி பகுதியில் சட்டவிரோதமாக வெளிமாநில மது பாக்கெட்டுகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து வீடுகளில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு போலீசார் ஏரி குத்தி பகுதியில் வீட்டில் சோதனை ஈடுபட்டனர் அப்போது இரண்டு கோணிப்பையில் கர்நாடகா மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் கர்நாடகா மாநில மது பாக்கெட்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட ராஜ்கமல் (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 385 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இன்று குடியரசு தின விழா முன்னிட்டு நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சட்டவிரோதமாக பேரணாம்பட்டு பகுதியில் மது விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பேரப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.